மிகவும் அருமையான படம் அல்ல இது அனைவருக்குமான பாடம்.. எனக்கு 11வயது இந்த திரைப்படம் வந்த பொழுது, என்னுள் ஒரு பாதிப்பை (நல்ல )ஏற்படுத்தியது உண்மை.. சுயநலம் மிகுந்த உலகில் பொதுநலம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்விலே உணர்த்திய அற்புதமான படைப்பு.. கே.பி என்ற மகா கலைஞரின் ஆகச்சிறந்த ஆக்கம்.. ஐயா ஜெமினி கணேசன் சங்கீத வித்துவானாகவே வாழ்ந்திருக்கிறார், கமல்ஹாசன் வழக்கம் போலவே அவருடைய பாத்திரத்தை சிறப்பாக செய்து விட்டார், ஆச்சி அம்மாவாக அசத்திவிட்டார், சீதா இரத்தினச்சுருக்கமாக மிகவும் அழகாக,.. இசையில் ராஜ்ஜியம் இசை ஞானி. அது ஒரு அற்புதமான காலம்.. நன்றி..