13 வருடம் முன்பு நிகழ்ந்த உண்மைச்சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்தது வேறு. ஆனால் அரசு மருத்துவமனைக்குள், ஓட்டலுக்குள் என்ன நடந்தது என்பதை கண்முன் கொண்டுவந்துள்ளார்கள். தீவிரவாதிகளின் இந்த கொடூரதாக்குதலுக்கு, அவர்களுக்கு மேலும் உதவியாக நமது தொலைக்காட்சி ஊடகங்களே பிரதான காரணமாக இந்த சீரியல் மூலம் அறிய முடிகிறது. இவர்களின் நெ.ஒன் சானலாக டிஆர்பி ரேட்டிங் அதிகமாக பண வெறி புகழ் வெறி பிடித்த ஊடகங்களின் மேல் அதீதமான கோபம் வருவதை உணர்கிறேன். இது போன்ற கொடூர சம்பவங்களின் போது, மருத்துவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு பாராட்டப்படவேண்டும். அவர்களின் மகத்தான பங்களிப்பை இதன் மூலம் இந்தியமக்களுக்கு உணர்த்தியமைக்கு நன்றிகள்!
ஆ.ஈசுவரன், திருப்பூர்.