தந்தையால் விதைக்கப்பட்டு.
தாயால் வளர்க்கப்பட்ட நான்.
இன்று..
கருவறையிலிருந்து இருவரையும்.
காண வெளிவந்த நான்.
முதல் அழுகை..
முதல் பசி..
கண்ணீரோடு கண் திறந்த நான்.
கிடந்தது தொட்டிலில் அல்ல..
குப்பை தொட்டியில்..
என் அழகு குரல் கேட்டது அனைவருக்கும்..
அனாதை என்ற பெயரில்...!!!!