மிகவும் அருமையான படம்... எதார்த்தமான நிகழ்வுகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. விவசாயி தாத்தாவின் வேளாண்மையின் மீதான பற்று மிகவும் அழகாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அதிலும் அவர் இறுதியில் காவல் நிலையத்தில் இருந்து திடுக்கென்று எழுந்தமரும் காட்சி தான் என் மனதை தொட்டது. அந்த காட்சியில் அனைவரின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலும் நம் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையிலும் அமைந்த நடிகர்களின் முக பாவனைகள் பாராட்டுக்குரியது... மொத்தத்தில் விவசாயத்தின் முக்கியத்துவம் மட்டுமல்லாது மற்ற தொழில்களின் அருமையையும் திருவிழாக்களின் ஆழமான அர்த்தங்களையும் எடுத்துரைத்த அருமையான அற்புதமான பாராட்டுக்கும் வாழ்த்திற்கும் உரிய படம்... படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.💐💐💐💐💐