குற்றவாளி என சோடிக்கபட்ட வழக்கை மறுபரிசீலனை செய்து உண்மையை கண்டறிந்து இறந்த நிரபராதியின் அவப்பெயரை நீக்குதல் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வு தாக்குதல் பற்றிய படம்..
தற்போதைய சூழ்நிலையில் கருத்து சொல்லும் படம் வந்தாலே அதை விமர்சனத்திற்கு உட்படுத்துவது ஒருவித ஃபேஷன்.. அந்த வகையில் இந்த படத்தை சேர்த்திட முடியாததற்கு காரணம் சமூகத்தின் பெரிய அவலமான "குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வு" ..
முற்பாதிபிற்பாதி, மசாலா , நகைச்சுவை, திடீர் திருப்பம் & பாடல்கள் என எதையும் எதிர்பார்க்காமல் ஒரு Documentary Film -ஐ போல் இந்த படத்தை நான் அணுகியதற்கு முதல் காரணமே இப்படம் சமூகத்திற்கான பாடமாக இருக்கவேண்டும் என்பது தான்.. ஒரு இடத்தில் ஜோதிகா சொல்லியிருப்பார், "பாலியல் வன்முறைக்குட்படுத்தபடும் குழந்தைகளிடம் மனம் திறந்து பேசினால் புரியும் குற்றவாளி உடனிருப்பவனாக கூட இருக்கலாம்" என்று.. சமீபத்தில் வெளியான #Luca 🎬 (Malayalam) படத்தில் கூட ஓரிடத்தில் காட்சிபடுத்தியிருப்பார்கள்..
திரைக்கதை சொதப்பல்கள் பல இருப்பினும் ஜோதிகாவின் கூர்மையான பார்வையும், பார்த்திபனின் நக்கல் வடிவிலான வாய்மொழி பேச்சுகளும் எவ்விடத்திலும் எனக்கு சலிப்பை உண்டாக்கவில்லை..
ஓர் ஆணவகொலை செய்த சாதிவெறிகொண்ட நபருடைய பிற்காலம் எப்படி இருக்கும் என்பதற்கான உதாரணம், அந்த நபரின் மனைவி தன் மறுமகளால் முதியோர் இல்லத்திற்கு துரத்தியடிக்கபட்டார் என்பது..
"பெண்ணுக்கு ஆடைநாகரீகத்தையும் ஒழுக்கத்தையும் கற்பிப்பதை விடுத்து, ஆணுக்கு கற்பியுங்கள்" என சிறிய ஸ்லிப்பர் ஷாட் அடிக்கிறார் ஜோ..