2018 வருடத்தின் என் பிறந்த நாளில் மறக்கமுடியாத தினமான இருக்க வேண்டும் என எண்ணி ஒரு நல்ல படமாக தேடிப்பிடித்து பார்த்தபடம். நினைத்ததுபோல் இந்த திரைப்படம் எனக்கு அதை மறக்கமுடியாத நாளாகவே மாற்றியது. மனதுக்கு நெருக்காமாக மாறிப்போன திரைப்படம்.
ரோட் மூவி வகையில் வரும் இந்த திரைப்படம், சமீபமாக காலமாக தோல்வியையே சந்தித்தித்து கொண்டிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் - அவர்களுள் ஒரு அழகான சுட்டி பெண் ஆலீவ் - அவளின் வெகுநாள் ஆசையான சிறுமிகளுக்கான அழகி போட்டியில் கலந்து கொள்ளும் பொருட்டு ஒரு காரை எடுத்துக்கொண்டு ஒன்றாக பயனிக்கும் பயனத்தில், வெற்றி, தோல்வி என்பது என்ன அதைவிட எந்த சந்தர்பத்திலும் கொண்டாத்தின், குடும்பத்தின் முக்கியதுவம் என்ன என்பதை அவர்கள் உணர்ந்துகொள்வதை பேசுகிறது.
காரில் பயனம் செய்யும் காட்சிகள் அனைத்தும் அழகாக படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பழுதடைந்த அந்த காரை மற்றவர்கள் தள்ளி அதை ஓடவைத்து விட்டு நகர்ந்து கொண்டிருக்கயிலேயே அதில் ஒவ்வொருராக தவ்வி ஏறிக்கொள்ளும் காட்சி அட்டகாசம். ஆலீவ் வாக வரும் அந்த குட்டி பெண் நம் அனைவரையும் ஈர்த்துவிடுவாள். இது தவிர்த்து ஒரு முரட்டுதனமான கிளைமாக்ஸ் இதில் இருக்கிறது.
தவறவிடகூடாத திரைப்படம்.