ஹீரோவுக்கு பெண் பார்க்கும் படலம், இடைவேளையில் வில்லன் அறிமுகம், செல் போன், கைதி கூட்டம், பெண் பிள்ளைகள் கடத்தல், அதிரடி புத்திரி ஆக்க்ஷன், அப்படின்னு வழக்கமான முருகதாஸ் ஃபார்முலா.
ரஜினிய அழகாகவும் ஆக்ரோஷமாகவும் காட்டி இருக்கிறார்கள்!!
70வயசுல இப்படி ஒரு அல்டிமேட் ஆக்சன் படம்!ஒரு தலைவர் ரசிகனாக மிக்க மகிழ்ச்சி!
வயதிற்கும், அனுபவத்திற்கும், அவருடைய அரசியல் நகர்வுக்கும் இப்படியான கதை களத்தை தவிர்த்து இருக்கலாம் என்று தோன்றுகிறது.
மற்றபடி,
வழக்கமாக பார்ப்பது போல் ரஜினிக்காக ஒரு முறை என்றில்லாமல், குறிப்பாக
நிவேதா தாமஸ் க்காகவும்
கட்டாயம் பார்க்கலாம்!!