"கல்யாண அகதிகள்"
கே.பாலசந்தர் இயக்கிய திரைப்படம். "கல்யாண அகதிகள்" என்ற இசைக் குழுவை ஆறு பெண்களும் நடத்தி வருகிறார்கள். ஆறு பெண்களும் திருமண வாழ்க்கைக்யில் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் இணைந்து ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். இத்திரைப்படம் நாசரின் முதல் திரைப்படம்.
வரதட்சணை பிரச்சினையால் வந்த பெண், திருமணநாளிலே விதவையான பெண், நண்பருடன் உறவு கொள்ள சொல்லும் கணவனை விட்டு விலகி வந்ந பெண், தலாக் முறையில் விவாகரத்தான முஸ்லீம் பெண், குடிகார கணவனை விட்டு வந்த பெண் இப்படி சமுதாயத்தால், ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களின் கதை இது.
சரிதா, வெகுளி பெண்ணாக, தவறை தட்டி கேட்கும் பெண்ணாக, கிராமத்து பெண்ணாக இருந்து மாடர்ன் பெண்ணாக மாறுவது, அமுலு கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்திருக்கிறார். இப்போது சீரியலில் ஆன்டியாக இருப்பவர்கள் நாயகிகளாக இருக்கிறார்கள். அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
காதலிக்கும் போது மதம் தெரியவில்லை. திருமணம் என்றதும் மதம் தெரிகிறது. கட்டாயமாக மதம் மாற சொல்லி காதலனும், காதலனின் வீட்டில் சொல்கிறார்கள். அதுவும் ஒரு வரதட்சணை, கட்டாயப்படுத்துவதால் காதலைப் புறக்கணிக்கிறாள்.
பெண்களுக்கான சமூகப் பிரச்சினைகள், ஆணாதிக்கம் பற்றி ஆழமாக பேசுகிறது. அதற்கான தீர்வுகளையும் முன்வைக்கிறது. ஆண்கள் இல்லாமல் பெண்களால் வாழ முடியும் என்று காட்டுகிறார்கள்.
-பொன்னியின் செல்வா