ஆரம்பம் கன ஜோர். கதையை எடுத்துச்செல்லும் விதம் அருமையாக இருந்தாலும், நம்ப முடியாத பேய்க்காட்சிகள். அதே பேய் தன்னுடைய கணவனுக்கு புரியவைக்காதாம். சரி கதைக்காக சில விட்டலாச்சார்யக்காட்சிகள்.
இதில் நடிக்கும் அனைவருமே, அவர்களுக்கு தந்த கதாபாத்திரத்தை நன்றாக செய்தாலும், வெண்ணிலாவாக வரும் நட்சத்திராவின் நடிப்பு கனஜோர்.சூப்பர்.
Ghost ஆக வந்தாலும் சித்ராவாக வருபவர் அலட்டலில்லாமல் நடிக்கிறார்.
ஒருவர் தன்னுடையமிகைப்படுத்திய நடிப்பால் எரிச்சல் கொ(ல்ல)ள்ள வைக்கிறார். Swetha வாக நடிக்கும் ? உதட்டில் படாமல் பேசுவதும், பல்ல இறுகக்கடித்துக்கொண்டு பேசுவதும், உதட்டைச்சுழிப்பதும்,கண்றாவி. வில்லத்தனம் காட்டறாராம். !!!
ஆனால்இயக்குநர் பிரியன் உணர்ந்து செய்து, தினமும் பார்க்க வைக்கிறார்.பாராட்டுக்கள்.
நன்றி..