சின்ன வயதில் முதல் நாளை வரை என்னை ஆட்கொண்ட நடிகன் நான் வளர்ந்த காலத்தில் எனக்கு தெரிந்த வரை பத்துக்கு எட்டு பேர் ரஜினி ரசிகர்
முதிர்ச்சி அடைய அடைய ரசனை மாறுகிறது. வெளி நாட்டு படங்கள், அவ்வளவு எதற்கு ஹிந்தி படங்கள், தமிழ் படங்கள் என்றெல்லாம் பார்க்கும் போது எவ்வளவு அழகாக கதை சொல்லி இருக்கின்றனர் என்றும் ரசித்திக்கொண்டுதான் irukeraen
இதோ 2020.. தர்பார் படம்.. வயது 70! இந்த வயதில் கூட இப்படி துள்ளலாக முழு ஈடுபாட்டோடு நடிப்பது என்பது மிகப் பெரிய சவால். அவரை குறை சொல்பவர்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம், சொல்லலாம். இருந்தாலும் சிறு நீரகம் பழுது பட்டு அதில் இருந்தும் மீண்டு வந்து இப்படி எல்லாம் தொடர்ந்து படங்களில் நடிப்பது எல்லாம் கடவுள் அனுக்கிரகம் இல்லாமல் சாத்தியமே இல்லை!
விஜய் அஜித் போன்ற நடிகர்கள் இன்று இவரோடு போட்டி போட்டு நடிக்கும் நிலையில் இருப்பது தான் இவரது வெற்றி!
Darbaril என் ரஜினியை கண்டேன். நன்றி Murugadoss ரஜினி என்கிற மனிதரிடம் இருக்கும் அந்த காந்தம் அந்த அளவுக்கு சீக்கிரம் யாரையும் விட்டு விலகாது! அவர் கடவுளால் ஆசீர்வதிக்க பட்டவர்.