இரவில்வாங்கினோம்! #இன்னும்விடியவேயில்லை!
என்பது இந்திய சுதந்திரம் பற்றி ஒரு கவிஞரின் கவிதை!
தற்போது இந்த முக்கியமான இந்திய சுதந்திரப்போராட்டத்தின் கடைசிகாலகட்ட வரலாற்றினை சோனி டிவி தங்கள் சேனலில் வெளியிட்டுள்ளதை அறிந்து நேற்று ஒரு மாத சந்தா கட்டி, இதுவரை மூன்று எபிசோடு பார்த்துள்ளேன். புத்தகத்தில் படிப்பதற்கும் அதையே டிவி சீரியலாக எடுக்க அசாத்தியமான எழுத்தாற்றல், 1946 கால கட்டத்திய வாழ்க்கைமுறை, அன்றைய விஞ்ஞான சாதனங்கள், உடை, கலாச்சாரம் என ஆழ்ந்த ஈடுபாடு இல்லாமல் இந்தப்புத்தகத்தை சீரியலாக மாற்ற முடியாது. ஆனால் சோனி டிவியினர் நான் பார்த்த 3 எபிசோடு வரை மிக நன்றாகவே காந்தி, நேரு, பட்டேல், கிரிபாளினி, சரோஜினி நாயுடு, ராஜாஜி, ஜின்னா, லியாகதல் அலிகான் என வரலாற்று நாயகர்களை அச்சு அசலாக அவர்களைப்போலவே ஆட்களை தேடிப்பிடித்து படைத்துள்ளார்கள்.
இந்த தேசத்தின் மீது பற்றுள்ள ஒவ்வொரு இந்தியனும் தன் தாயின் வரலாற்றினை அறியவேண்டியது அவசியம். பாகிஸ்தானுக்கு ஆகஸ்ட் 14 ல் கிடைத்த சுதந்திரம், ஏன் இந்தியாவிற்கு 14 ம் தேதி இரவு 12 மணிக்கு ஆகஸ்ட் 15 பிறக்கும் வேளையில் தரப்பட்டது என்ற மகத்தான உண்மையை அறியவேண்டுமானால் ... இந்த சீரியலை ஒன்று விடாமல் பாருங்கள்! நீங்கள் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இருங்கள்... அல்லது எந்த நடிகரின் நடிகையின் விசுவாசியாக வேண்டுமானாலும் இருங்கள்.... இந்த சீரியலை மட்டும் பார்க்கத்தவறாதீர்கள்!