Before Christopher Nolan’s Oppenheimer biopic hit the screen , I accidentally started watching Abhay Pannu’s “Rocket Boys“
ஏதோ என் கண்முன்னே, 1960களின் சீன ஆக்கிரமிப்புக்கு பின்னர் உணர்ந்த அணுகுண்டுவின் தேவையையும், அதனை எண்ணி பயந்து நிராகரித்தவரையும், யார் அவர்கள் என்று அறிய 1940களில் சஞ்சரித்ததும், பின்னர் அங்கு கண்ட ஹோமி ஜஹாங்கீர் பாபா, “நம்மூர் கார்ல் ஸேகன்” விக்ரம் அம்பாலால் சாராபாஃய், Cambridge before WWII, அங்கிருந்த அந்நாள் ராக்கெட் முன்னோடி ராபர்ட் கோடாட், இந்திய மேஹநாத் சஹா, சர் சி. வி. ராமன், அவரது IISc., காந்தியின் அறப் போராட்டம், ஜின்னாவின் கலவரத்தை தூண்டிய பேச்சுக்கள், IIScயில் வெள்ளயனின் கொடியை இறக்கி, இந்திய கொடியை பறக்க விட்ட பாபா/விக்ரம், அவர்களை நீக்க முயற்ச்சித்தது, அதன் விளைவான பிரிட்டிஷ் நிதி மறுப்பு, ராமனின் பதவி துறப்பு , சற்றும் தளராமல் டாடாவிடம் நிதி திரட்டிய இந்திய விஞ்ஞான முன்னோடிகள், அவர்களது பேரின்ப காதலும் அதனுடன் மோதிய சிற்றின்ப காதலும், அதன் சோகங்களும், அதிலிருந்து மீண்டு, கனவு பாதை காண முயற்ச்சித்ததும், அதற்க்கு ஆதரவான அற்புத , ஆமாம் அற்புத, நேஹ்ருவும், JRDயும், அதை தடுக்கும் அமெரிக்க CIA அமைப்பும், அதன் இந்திய கூலிப்படையும், நீச்சல் குள நியுக்கிலியர் ரியாக்டர்களும், ஜின்னாவின் விஷ பேச்சுகளை பரப்பும் சித்தப்பன்னை கண்டித்த 14 வயது சிறுவனும், மாட்டுவண்டியில் கொண்டு சென்று அதனை மனிதர்களின் முயற்ச்சியில் தும்பாவில் , நவம்பர் 21 1963 ஆம் தேதியில் பறக்கவிட்ட ராக்கெட் …. 👌👏👍
It is simply awesone 👌👏 👍and I love it 🫡