கசாப்புக் கடைக்கு போய் வந்த மாதிரி இருக்கு. அயல் நாட்டு Gore genre படங்களில் கூட இந்த அளவு கவுச்சி வாடை வீசாது. எனது பார்வையில், நான் கண்டது செல்வராகவனின் பிழற்கண்ணும், கீர்த்தியின் அடர்த்தியற்ற கபால முடியும்தான். இனி எந்த பெரிய கதாநாயகனுக்கும் ஜோடியாக நடிப்பது சந்தேகம்தான்.
இன்ஸ்பெக்டர் வேடம் முரண்பாடான ஒன்று. அவரே கீர்த்தியை உள்ளே அனுப்புகிறார்; பின்னர் வில்லனிடம் விட்டுவிட வேண்டுகிறார். அதேபோல, அவள் கிடக்கும் நிலையைப் பார்த்து முதலில் வருத்தப்படும் அவர் அடுத்த நொடியே மேலே பாய்கிறார். கடைசியில் கீர்த்தி கையை வெட்டுவதற்குத் தோதாக, துப்பாக்கியை நீட்டியபடியே குறியெல்லாம் பார்க்கிறார். பார்வையற்ற சிறுவனை என் அவ்வளவு பில்ட் அப் செய்ய வேண்டும்?
80k ஹிட்ஸ் ட்ரைலருக்கே கெடச்சதுன்னுதான் போயி பாத்தா, எல்லாம் புஸ்...கதையென்று எதுவும் இல்லாததால், ரொம்ப சாதாரணப்படம்.