யாராவது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று நினைப்பார்களா?
நம்ம ஹீரோ நினைக்கிறார். ( ஆமாம்! இவர்தான் 10 மாதம் சுமந்து, கஷடப்பட்டு, உயிரை பணயம் வைக்கப்போகிறாரா என்ன…?! )
ஆனால் ஸ்பெர்ம் டொனேட் செய்கிறார். ச்சும்மா… ச்சும்மா… ஜாலியா… ஜாலியா...
காதலன், ஒருமுறை வேறொருத்தியுடன் உறவு கொண்டு, ஹீரோயினுக்கு துரோகம் செய்துவிடுகிறார். சரி, காதலன் மேல் தானே வெறுப்பு வரவேண்டும். ஹீரோயின் ஒட்டுமொத்த ஆண்களையும் வெறுத்து விடுகிறார். அதோடு தாம்பத்ய சுகத்தையும் வெறுத்துவிடுகிறார். ஆண் இல்லாமலேயே குழந்தை பெற்று கொள்ள முடிவெடுக்கிறார். ஸ்பெர்ம் பேங்க்கை நாடுகிறார். ஹீரோவின் ஸ்பெர்ம் அப்போது பயன்படுத்தப் படுகிறது.
முடிச்சு போட்டாச்சா…
ஹீரோ, ஹீரோயின் சந்திக்கிறார்கள். அப்போது ஹீரோ, ஹீரோயினைப் பார்த்து வழிய, ஹீரோயின் கர்ப்பமாக இருப்பதை மறைத்து, விலகி விடுகிறார்.
8 வருடங்கள் கழித்து, ஹீரோ தன் மகனை சந்திக்கிறார். தந்தை, மகன் என்ற பிணைப்பு இருப்பது தெரியாமல், இருவரும் பாசத்தில் உருக ஆரம்பித்து விடுகின்றனர். பிறகு ஹீரோ, ஹீரோயின் இருவரும் சேர்ந்து வாழ… இல்லையில்லை சேர்ந்து இருக்க முடிவு எடுக்கின்றனர்.
ஆணும், ஆணும் ஊர்கூடி வாழ்த்த, விமர்சியாக திருமணம் செய்வது இன்னொரு பக்கம்.
அந்த முடிச்சு?!!! முடிச்சு போட்டா முடிச்சா அவிழ்க்கணுமா என்ன? அட போங்க வீட்டுக்கு...